எங்கள் இனிய எட்மன்டன் வாழ் தமிழ் மக்களே!
வணக்கம்! அனைவருக்கும் எங்கள் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு தமிழர் பாரம்பரிய பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படுகின்ற கலாச்சார நிகழ்ச்சிகள் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்கின்றோம் .
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
செயின்ட் மத்தியாஸ் ஏஞ்சலிக்கன் சர்ச் & பரிஷ் ஹால்
St Matthias Anglican Church & Parish Hall
6210 188 St NW, Edmonton, AB T5T 5T4
தேதி : பிப்ரவரி 9 , மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதி இலவசம். நிகழ்ச்சிகளின் நிறைவில் உணவு பரிமாறப்படும்!
உங்கள் வருகையை முன்கூட்டியே பெயர் விபரங்களுடன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்து இந்நிகழ்ச்சியைசிறப்பிக்க வேண்டுகிறோம். மின்னஞ்சல் முகவரி: edmontontamilculture@hotmail.com
தமிழர்களின் கலாச்சார வாழ்வியலை முன்னிலைப்படுத்தும், கிராமிய நடனங்கள், கிராமிய பாடல்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வினோத உடைப்போட்டியும் நடைபெற இருக்கின்றது. இந்தநிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் தங்கள் பெயர் விபரங்களை கீழே இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 23 ஆம் தேதிக்கு முன்பு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
விண்ணப்பத்திற்கான இணையதளம்: http://www.etcacanada.ca/program-entry-registration/
வினோத உடைப் போட்டியின் விதி முறைகள்:
- 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- பெற்றோர்கள் ETCA உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
- குழந்தைகள் ஏற்கும் வேடத்திற்கேற்ற படி குறைந்தபட்சமாக 30 விநாடிகள் அதிகபட்சமாக ஓரு நிமிடம்தமிழில் மட்டுமே உரையாட வேண்டும்.
- மேலும் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகையால், உங்கள் ETCA உறுப்பினர் உரிமையை புதுப்பித்தல் மற்றும் புதிதாக உறுப்பினர் உரிமை பெற எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது நிர்வாகக்குழுஉறுப்பினர் சுரேகா நாதன் @ 587-589-8677-ஐ நேரடியாகவோ தொடர்பு கொள்ளவும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் கலாச்சாரம்!
இப்படிக்கு,
ETCA நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
Dear Edmonton Tamil Cultural Association members:
Vanakkam! Wish you all a very Happy and Prosperous New Year 2019!
This year we are pleased to announce that Our Tamil Heritage Pongal programs will be held on Saturday, February 9, 2019, and we warmly welcome you all to this event.
Venue of the program:
St Matthias Anglican Church & Parish Hall
6210 188 St NW, Edmonton, AB T5T 5T4
Date: February 9, 2019, the event will start @ 6:00 pm.
The admission for ETCA members is free. The entertainment will be followed by Dinner
Please RSVP to the email given below to secure your spot: ETCA Email: edmontontamilculture@hotmail.com
The program includes the promotion of cultural life of Tamils, rural dances, folk songs and Fancy Dress Competition for children under the age of 12. Those who are willing to participate in these events are requested to fill the form (click here for registration form) to confirm your participation on or before January 23, 2019.
The rules of the Fancy Dress Competition are:
- Only children under the age of 12 can participate
- Parents should be ETCA members
- Based on the role chosen by the participants, they should talk in Tamil between 30 seconds and 60 seconds
All the participants are requested to register their performance by filling the registration form online.
Since this program is only for the members of ETCA, you are requested to send an email to edmontontamilculture@hotmail.com or connect with Sureka Nathan @ 587-589-8677 for your membership renewal or to get a new membership.
We look forward to seeing active participation from ETCA members and their family to make this event memorable.
With warm regards,
ETCA Executive Committee
One thought on “Pongal Celebration”
Comments are closed.