New Committee 2018-2019

Dear Members,

On behalf of the new Executive Committee, I would like to thank you very much for attending the Edmonton Tamil Cultural Association (ETCA) Annual General Meeting which was held on 14th April 2018 and elected a new team to serve our association for the period of 2018/2019.

Incoming Executive Committee members and their responsibilities are given below:

  1. Dr. Chinnia Subramanian – President
  2. Mrs. Mary Jaya Stanislus – Vice President
  3. Mr. Ravindran Subramaniam – Secretary
  4. Mrs. Ally Soundararajan – Treasurer
  5. Mrs. Sureka Nathan – Public Relations Chair
  6. Mr. Mukund Shankar Krishnan – Youth Affairs Chair
  7. Mrs. Preetha Govindarajan – Communications Chair
  8. Mrs. Maykala Das – Business Development Chair
  9. Mr. Sathya Sai Arumugam – Past President

I am very much delighted to inform you that we had a smooth transition from the outgoing Executive Committee of ETCA and we had our first Executive Committee meeting on 6th May 2018. Currently, we are working on modifying the functional structure of ETCA Executive Committee and our vision for the next two years.

While our committee is presently engaged in fulfilling essential administrative tasks of ETCA, the following regular activities are taking place with the help of dedicated volunteers.

  • Weekly Tamil Classes on Saturdays and Sundays
  • Weekly Litter Squad Program of the City of Edmonton – This is a 16 week commitment by ETCA volunteers for the first time involving 3 volunteers every Saturday for an hour.

At the same time, I would also like to inform you that our committee is working on staging the following upcoming events.

  • Thyagaraja Aradhana – Saturday, June 9, 2018 at Maha Ganapathy Temple.(Jointly presented by ETCA and Alberta Carnatic Talent Showcase)
  • ETCA Annual Deepavali Celebration – Sunday, November 11, 2018 at Festival Place.

On behalf of ETCA Executive Committee, I kindly request you to help to strengthen our volunteer force to carry out all our activities. Please feel free to communicate your interests to edmontontamilculture@hotmail.com

With warm regards
Dr. Chinnia Subramanian – President
For ETCA Executive Committee

புதிய நிர்வாகக்குழு

அன்புள்ள உறுப்பினர்களுக்கு,
வணக்கம்

14 ஏப்ரல் 2018 ஆம் தேதி நடைபெற்ற எமது குழுமத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, எமது குழுமத்திற்காக 2018/2019 ஆண்டுகளுக்கான காலப்பகுதியில் சேவையாற்ற புதிய நிர்வாகக்குழுவினை தெரிவுசெய்தமைக்காக உங்கள் அனைவருக்கும் புதிய நிர்வாகக்குழுவின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நிர்வாகக்குழுவின் அங்கத்தவர்களும் அவர்களின் பொறுப்புகளும் பின்வருமாறு.

  1. முனைவர். சின்னையா சுப்ரமணியன் – தலைவர் 
  2. திருமதி. மேரி ஜெயா ஸ்டானிஸ்லஸ் – உப தலைவர் 
  3. திரு. ரவீந்திரன் சுப்பிரமணியம் – செயலாளர் 
  4. திருமதி. அல்லி சௌந்தரராஜன் – பொருளாளர் 
  5. திருமதி. சுரேகா  நாதன் –   பாரம்பரியம் / மக்கள் தொடர்புத்துறைப் பொறுப்பாளர்
  6. திரு. முகுந்த் சங்கர் கிருஷ்ணன் – இளைஞர் விவகாரத்துறைப் பொறுப்பாளர்
  7. திருமதி. ப்ரீத்தா கோவிந்தராஜன் – தகவல் தொடர்புத்துறைப் பொறுப்பாளர்
  8. திருமதி. மேகலா தாஸ்  – வர்த்தக அபிவிருத்தித்துறைப் பொறுப்பாளர்
  9. திரு. சத்ய சாய் ஆறுமுகம் –  முன்னாள் தலைவர்
எமது குழுமத்திற்காக  கடமையாற்றி வெளிச்செல்லும் நிர்வாகக்குழுவினரால் சிறப்பான முறையில் கடமை மாறுதல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன  என்பதையும், அதனைத் தொடர்ந்து கடந்த 2018, மே  மாதம் 6ஆம் தேதி  புதிய நிர்வாகக்குழுவின் முதலாவது  கூட்டம் நடைபெற்றது என்பதையும் நான் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எமது குழுமத்தின் செயற்பாட்டுக்கட்டமைப்பையும் மற்றும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கான இலக்குகளையும் மாற்றியமைப்பதில் நாம் தற்போது முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம்.

அத்தியாவசியமான  நிர்வாகச்செயல்பாடுகளில் எமது நிர்வாகக்குழுவினர் ஈடுபட்டிருக்கும் அதே சமயத்திலே, எமது குழுமத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும்  தொண்டர்களினால் பின்வரும் வழக்கமான வேலைத்திட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  • சனி ஞாயிறு தமிழ் வகுப்புகள் 
  • வாராந்த Litter Squad Program of City of Edmonton – எமது குழுமத்தினால் முதற்தடவையாக தொடர்ச்சியாக 16 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் 3 தொண்டர்களினால் ஒரு மணித்தியாலத்திற்கு இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
அதே சமயம், வரவிருக்கும் பின்வரும் நிகழ்ச்சிகளுக்கான வேலைத்திட்டங்களிளும் எமது குழு ஈடுபட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • தியாகராஜ ஆராதனை – சனிக்கிழமை. 2018, ஜூன் 9 ஆம் தேதி.இடம்: மஹாகணபதி ஆலயம், 28, Running Creek Road, Edmonton, Alberta.(எட்மண்டன் தமிழ் கலாச்சார குழுமமும், அல்பேர்ட்டா கர்நாடக  சங்கீதத் திறமைகளுக்கான காட்சியகமும் இணைந்து  நடாத்தும் நிகழ்ச்சி).
  • வருடாந்த தீபாவளிக் கொண்டாட்டம் – ஞாயிற்றுக் கிழமை, 2018, நவம்பர் 11ஆம் தேதி.  இடம்: Festival Place, 100, Festival Way, Sherwood Park, Edmonton, Alberta.
தயவு செய்து எங்கள் தொண்டர் குழுவை  வலுப்படுத்தி எமது குழுமத்தின் பணிகளை முன்னெடுக்க  உதவுமாறு  உங்களிடம் எமது நிர்வாகக் குழுவின் சார்பாக  தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆர்வங்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு  தயங்காமல் தெரியப்படுத்துங்கள்.
edmontontamilculture@hotmail.com

நன்றி
வணக்கம்
அன்புடன்

முனைவர். சின்னையா சுப்ரமணியன் – தலைவர்
எட்மண்டன் தமிழ் கலாச்சார குழுமம்