Tamil teachers recruitment

அன்புள்ள உறுப்பினர்களுக்கு, வணக்கம் எமது எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமத்தின் வார இறுதி தமிழ் வகுப்புகளை நடத்துவதற்கு   மூன்று ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். புதிய கல்வியாண்டு செப்டம்பர் 15, 2018 இல் தொடங்கி ஜூன் 30 , 2019 இல் முடிவுறும். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் விண்ணப்பத்தை பின்வரும்  மின்னஞ்சல் முகவரிக்கு   2018, August 25, ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்புமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் முகவரி: edmontontamilculture@hotmail.com ஆசிரியர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் தகைமைகள்  பின்வருமாறு, எமது குழுமத்தின் பாடத்திட்டத்திற்கேதுவாக மாணவர்களை பயிற்றுவித்தல். எமது குழுமத்தின் கலாச்சார நிகழ்வுகளில் மாணவர்களை பங்கேற்க தயார்படுத்துதல். தமிழ் பாரம்பரிய வாழ்வுமுறைகள் பற்றிய கண்ணோட்டங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தல். தெரிவுசெய்யப்படும் ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் முகமாக எமது குழுமத்தினால் அவர்களுக்கு வெகுமானம் அளிக்கப்படும். மேலும் இத்தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து எமது ஆசிரிய தேர்விற்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி வணக்கம் அன்புடன் நிர்வாக குழு – எட்மண்டன் தமிழ் கலாச்சாரக் குழுமம் Dear Members, Greetings The Edmonton Tamil Cultural Association needs three teachers to […]